விவசாய அமைச்சு

கடற்பாசி வளர்ப்பிற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன

மீனவ சங்கங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக விசேட திட்டத்தின் கீழ் மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினூடாக கடற்பாசி வளர்ப்புத்திட்டத்திற்கென கடற்பாசி வளர்ப்பிற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.  பயிற்சி வழங்கப்பட்ட முசலி, நானாட்டான், மற்றும் மன்னார் நகர  மீன்பிடி சங்கங்களுக்கு 3.6மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வடமாகாண மீன்பிடி அமைச்சரினால் அமைச்சரின் மன்னார் உப அலுவலகத்தில் 25 யூலை 2017 அன்று வழங்கப்பட்டன. 

இந்நிகழ்வில் இந்நிகழ்வில் வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களும் வடமாகாண மீன்பிடி அமைச்சின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன், கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன், இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகார சபையின் வடமாகாண பிரதிப் பணிப்பாளர் பா.நிருபராஜ் மற்றும்; மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.