செயலாளர்

 திரு.க.தெய்வேந்திரன்

செயலாளர்

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு

இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

Tel: +94-21-2217303

Fax: +94-21-2217304

Mobile: 0777811212

Email:

 

 

 

விவசாய அமைச்சு

இருமருதங்குளம் - சமளன்குளம் வீதிப் புனரமைப்பு பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் 2017ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து (PSDG) வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் அவர்களால் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட 5 மில்லியன் ரூபாவில் வவுனியாவில் இருமருதங்குளம் - சமளன்குளம் வீதிப் புனரமைப்பு பணிகள் 18 யூலை 2017 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினரான செ.மயூரன் ஆகியோரும் மற்றும் வவுனியா மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், சேமமடு பாடசாலை அதிபர், ஒப்பந்தக்காரர், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும்  பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 width=500

 width=500

 

 width=500

 width=500