செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை, மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன

வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவையை மேம்படுத்தும் திட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடங்கள் 24 செப்டெம்பர் 2017 அன்று திறந்து வைக்கப்பட்டன.

கெளரவ சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, யாழ் மாவட்டத்தில் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் இரண்டு மாடிகளை கொண்டதான வெளிநோயாளர் பிரிவுக்கான புதிய கட்டடத்தினையும், ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக அலகுக்கான இரண்டு மாடிக்கட்டடத்தினையும் மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை கட்டடத்தினையும் திறந்து வைத்தார்.

எய்ட்ஸ், காசநோய், மலேரியா நோய்கட்கு எதிரான உலக நிதியமான GFATM நிதியத்தின் கீழ் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தல் என அழைக்கப்படும் திட்டம் வடமாகாணத்தின் ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நோக்குடன் 2011 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 

இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆறு வருடங்களில் 29 வெளிநோயாளர் பிரிவுகள், 12 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள், 15 சுகாதார வைத்திய அதிகாரி தங்கு விடுதிகள், 3 மார்புநோய் சிகிச்சை நிலையங்கள், 1 மாவட்டப் பொதுக் களஞ்சியம், 5 மலேரியா தடை இயக்க அலுவலகங்கள் உட்பட 68 புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டன. புதிய பிக்கப் வாகனங்கள் ஏழு வழங்கப்பட்டன. 634 சமூக சுகாதாரப்பணி உதவியாளர்கள் ஆரம்ப சுகாதார சேவைக்காக பணிக்கு அமர்த்தப்பட்டனர்;. பல ஆய்வுகூடங்களுக்கு மருத்துவ உபகரணங்களும் தளபாடங்களும் வழங்கப்பட்டன. மொத்தமாக இத்திட்டத்திற்கு 1824 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் வடமாகாணத்தின் ஆரம்ப சுகாதார சேவைகள் கட்டமைப்பு புத்துயிர் பெற்றுள்ளது.

இந்த நிகழ்வுகளில் கௌரவ சுகாதாரப் பிரதி அமைச்சர் பைசல் ஹாசிம், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ஞா.குணசீலன் யாழ் மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராச்சி, உலகநிதி நிறுவனத்தின் திட்ட பணிப்பாளர் பிலன்கா, வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன், வடக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன் மற்றும் செயல்திட்ட உத்தியோகத்தர்கள், வைத்திய அதிகாரிகள், தாதியர்கள் மற்றும் பல பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

  width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 

 

 width=500

 width=500

 width=500

 

 width=500

 width=500