செயலாளர்

திரு.சி.சத்தியசீலன்
கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர்

கல்வி அமைச்சு அலுவலகம்,
செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை

 

தொ.இல: 021-221 9259

தொ.நகல்: 021-222 0794 கைபேசி: 0774933994

மின்னஞ்சல்:

sathiyaseelan1964@gmail.com

பணிக்கூற்று

கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறைசார் செயற்பாடுகளில் ஓருங்கிணைப்பினையும் வழிகாட்டலையும் உறுதிப்படுத்தும் கொள்கைகளை உருவாக்குதலும், தனியாள் விருத்தி கட்டியெழுப்பப்படுவதை உறுதிப்படுத்தலும், வடமாகாணத்தில் சமநிலை ஆளுமையுள்ள சமுதாயத்தை தோற்றுவித்தல்.

செய்திகளும் நிகழ்வுகளும்

கல்வி அமைச்சு

கிளிநொச்சி சிவபாதகலையகம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின்  வருடாந்த பரிசளிப்பு வைபவம்  2017  

கிளிநொச்சி சிவபாதகலையகம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின்  வருடாந்த பரிசளிப்பு வைபவம் 21 செப்ரெம்பர் 2017 அன்று பாடசாலை கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

இந் நிகழ்வில் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.  இந் நிகழ்வானது பாடசாலை அதிபர் திருமதி பரமேஸ்வரி சோதிலிங்கம் தலைமையில்  கிளிநொச்சி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்(தமிழ்) திருமதி. ரி. மருதநாயகம், கரைச்சி கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. அமிர்தலிங்கம், பெற்றார் மற்றும் நலன்விரும்பிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. இப் பரிசளிப்பு வைபவமானது பாடசாலை 1982 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதன் பிற்பாடு முதல் தடவையாக இடம்பெற்றது பாடசாலை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்த்து. 

பாடசாலை மட்டம் , மாகாண மட்டம், தேசிய மட்ட பொதுப்பரீட்சைகளில் மற்றும் போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் பிரதம விருந்தினர் மற்றும் விருந்தினர்களால் சான்றிதழ்கள் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். 

மேலும் இந்நிகழ்வின் முத்தாப்பாய் மாணவர்களால் திறம்பட ஒழுங்கமைக்கப்பட்ட கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.