கல்வி அமைச்சு

வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தின் 2016 ம் ஆண்டுக்கான சாதனையாளர்கள் கௌரவிப்பும் பரிசளிப்பு நிகழ்வும் 09.10.2017 அன்று நடைபெற்றது.

வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான சாதனையாளர் கௌரவிப்பும் பரிசளிப்பு நிகழ்வும் 09.10.2017 அன்று பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துசிறப்பித்தார். 

 

2016 ம் ஆண்டு பாடசாலை சமூகத்தில் பல்வேறு துறைகளில் சாதனைகளை நிகழ்த்தியோர் பிரதம விருந்தினராலும் அதிதிகளாலும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.