முதலமைச்சரின் செயலாளர்

mohanathan

திருமதி . ச. மோகநாதன்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

கை.தொ.பே: 

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7120

மின்னஞ்சல்:

 

உள்ளூராட்சி அமைச்சு

முதலமைச்சரின் 2017ம் ஆண்டிற்குரிய பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் கீழ் உதவி வழங்கல்

முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் குறைந்த வருமானம் பெறும் ஒரு தொகுதி மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் முதலமைச்சரின் 2017ம் ஆண்டிற்குரிய பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து ரூபா.4,304,500.00 பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வானது 08 நவம்பர் 2017 அன்று கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது சுயதொழில் முயற்சிக்காக பயனாளி ஒருவருக்கு ரூ.79,000.00 பெறுமதியான மீன்பிடி உபகரணங்களும் இன்னொரு பயனாளிக்கு ரூ.73,000.00 பெறுமதியான ஒலியமைப்பு சாதனங்களும் பாடசாலை மாணவர்கள் 18 பேருக்கு தலா ரூ.14,000.00 பெறுமதியான துவிச்சக்கர வண்டிகளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ரூ.276,000.00 பெறுமதியான மடிக்கணனிகளும்  பாடசாலை மாணவர்கள் 04 பேருக்கு தலா ரூ.2000.00 பெறுமதியான கற்றல் உபகரணங்களும் 08 பயனாளிகளுக்கு தலா ரூ. 36,000.00 பெறுமதியான தையல் இயந்திரங்களும் 03 பயனாளிகளுக்கு தலா ரூ.60,000.00 பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரங்களும் வருமானம் குறைந்த 16 குடும்பங்களுக்கு மலசலகூடம் அமைப்பதற்கென ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 95,000.00 வும் 11 வறிய குடும்பங்களுக்கு தனித்தனியாக குடிநீருக்கான கிணறு, குழாய்க் கிணறு அமைப்பதற்காக ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 95,000.00 வும் கால்நடை வளர்ப்பிற்காக 19 வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 30,000.00 வும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

 

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500