பிரதம செயலாளர் செயலகம்

குருதிக்கொடை முகாமும் மருத்துவப் பரிசோதனையும்

பிரதிப் பிரதம செயலாளர் - ஆளணியும் பயிற்சியும் அலுவலகம், முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகு ஆகியவை  யாழ் போதனா வைத்தியசாலை  மற்றும் யாழ் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியவற்றுடன் இணைந்து குருதிக்கொடை முகாம் மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை 21.11.2017ம் திகதியன்று காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 2.00 மணிவரை இல. 68, குறசெற் வீதி, சுண்டிக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளன.

இக்குருதிக்கொடை நிகழ்வில் கலந்து கொள்வதற்கு சகல மாகாண திணைக்களங்களிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே மேற்படி முகாமில் கலந்து கொள்ள விரும்பும் சகல அரச அலுவலர்களையும் 20.11.2017 இற்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.