பிரதம செயலாளர் செயலகம்

உள்ளூராட்சி அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய குழுவினருடனான கலந்துரையாடல்

நல்லிணக்க ஆலோசகர் ஸீன் மக்ஹெட்டி மற்றும் சிரேஸ்ட பங்காளர் கெர்ஹார்ட் வான்ட் லான்ட் உட்பட  நான்கு அதிகாரிகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றிய குழுவினரிற்கும் பிரதம செயலாளர், வடக்கு மாகாண சபை அ.பத்திநாதன் அவர்களுக்கும் இடையேயான கலந்துரையாடலொன்று 22 நவம்பர் 2017 அன்று பிரதம செயலாளர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலானது உலக வங்கியின் நிதிப் பங்களிப்பின் கீழ் உள்ளூராட்சி அபிவிருத்திக்கான திட்டம் தொடர்புடையதாக  இருந்தது. இக்கலந்துரையாடலில் பிரதி பிரதம செயலாளர் - நிதி, எஸ்.யு.சந்திரகுமாரன், பிரதி பிரதம செயலாளர் - திட்டமிடல் இ.உமாகாந்தன் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர்  பற்றிக் டிரஞ்சன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.