chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

வட மாகாணசபைக்கு ஏழு தங்க விருதுகள்

பாராளுமன்றப் பொதுக் கணக்குக் குழுவால் அறிமுகப்படுத்தப்பட்ட  இணையமயப்படுத்தப்பட்ட கணினி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாணசபைகள், மாவட்டச் செயலகங்கள் மற்றும்  உள்ளூராட்சிமன்றங்கள் உள்ளடங்கலான  831 நிறுவனங்களது 2015ம் ஆண்டிற்கான செயலாற்றுகை மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றுள் அதியுயர் செயலாற்றுகையை வெளிப்படுத்திய 81 நிறுவனங்களிற்கு தங்க, வெள்ளி விருதுகளும், சான்றிதழ்களும்  வழங்கும் நிகழ்வு 2017.11.13ம் திகதி  பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.  

இந்நிகழ்வில்  ஏழு தங்க விருதுகளை வட மாகாணசபையைச் சேர்ந்த முதலமைச்சரின் அமைச்சு, சுகாதார  அமைச்சு, பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் - நிதி, சுகாதார சேவைகள் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், வீதி அபிவிருத்தித் திணைக்களம் ஆகியன  பெற்றுக்கொண்டன. அத்துடன் பாராட்டுச் சான்றிதழ்களை நல்லூர், பச்சிலைப்பள்ளி, கரைதுறைப்பற்று, மன்னார், வவுனியா தெற்கு (தமிழ்) ஆகிய பிரதேச சபைகள் பெற்றுக்கொண்டன.
இந்நிகழ்வில் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் பிரமத விருந்தினராகவும்,   கௌரவ பிரதமர், சபாநாயகர்   ஆகியோர் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டதுடன் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கணக்காய்வாளர் நாயகம் மற்றும் பாராளுமன்றப் பொதுக் கணக்குக் குழு உறுப்பினர்கள், திறைசேரி செயலாளர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும், இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிறுவகத்தால் 2015ம் ஆண்டின் சிறந்த ஆண்டிறுதிக் கணக்கறிக்கை தொடர்பான போட்டியிலும் வட மாகாணசபை  விருதினைப் பெற்றுக்கொண்டமை  குறிப்பிடத்தக்கது.

தற்போது, வட மாகாணசபையைச் சார்ந்த அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள்  நிதி முகாமைத்துவத்தில் முன்னேற்றம் பெற்று விளங்குகின்றன.