Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
வடமாகாண உத்தியோகத்தர்களுக்கான இரத்ததான முகாமும் மருத்துவ முகாமும்

chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

வடமாகாண உத்தியோகத்தர்களுக்கான இரத்ததான முகாமும் மருத்துவ முகாமும்

வடமாகாண அரச சேவை அலுவலர்களுக்கான இரத்ததான முகாமும் மருத்துவ முகாமும் பிரதம செயலாளர், வடமாகாணம் அவர்களின் வழிகாட்டலுடன் பிரதிப் பிரதம செயலாளர் - ஆளணி மற்றும் பயிற்சி அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு 21 நவம்பர் 2017 அன்று பிரதிப் பிரதம செயலாளர் - ஆளணி மற்றும் பயிற்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. 

அரச அலுவலர்களுக்கிடையில் இரத்ததானம் வழங்கும் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாகவும் விரைவாக அதிகரித்துவரும் தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் அடிப்படைப் பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை வழங்கும் நோக்கிலும் மேற்படி நிகழ்வானது ஒழுங்குசெய்யப்பட்டது. 

இந் நிகழ்வில் சுமார் 130 வரையான வடமாகாண உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். இதில் மருத்துவபரிசோதனைக்காக 39 பெண் உத்தியோகத்தர்களும் 57 ஆண் உத்தியோகத்தர்களுமாக மொத்தம் 96 பேர் கலந்துகொண்டனர். இரத்ததான நிகழ்வில் 08 பெண் உத்தியோகத்தர்களும் 57 ஆண் உத்தியோகத்தர்களுமாக 65 பேரும் கலந்துகொண்டனர். இதில் இரத்ததானம் வழங்கியோரின் எண்ணிக்கை 43 ஆகக் காணப்பட்டது.

மேற்படி நிகழ்வில் யாழ் மாநகர வைத்திய அதிகாரி யசிதரன் அவர்கள் கலந்துகொண்டு தொற்றா நோய்கள் தொடர்பான விளக்கவுரை ஒன்றை வழங்கியதுடன் மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.

இந் நிகழ்வுக்கு யாழ் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவு, நீரிழிவுச் சிகிச்சைப் பிரிவு, பிராந்திய சுகாதாரப் பணிமனை–யாழ்ப்பாணம், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை–யாழ் மாநகர சபை என்பன கலந்து கொண்டன. நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு வடமாகாண விவசாய அமைச்சினால் மரக் கன்றுகள் விநியோகிக்கப்பட்டன. 

பிரதிப் பிரதமசெயலாளர் - ஆளணி மற்றும் பயிற்சி, முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி அலகு என்பவற்றால் வடமாகாணத்தில் முதன் முறையான முன்னெடுக்கப்பட்ட இந் நிகழ்வானது எதிர்வரும் காலங்களில் 06 மாதங்களுக்கொருமுறை நடாத்தப்படுவது பயனுடையதாக அமையுமென கலந்துகொண்ட உத்தியோகத்தர்கள் பலரும் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.