கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

தேசிய ரீதியில் சாதித்த மாணவனை ஆளுநர் நேரில் சந்தித்து பாராட்டு

தேசிய ரீதியில் பௌதிக விஞ்ஞான (கணித) பிரிவில் முதலிடம் பெற்ற யாழ் ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகனை வட மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே பருத்தித்துறை புற்றளையில் அமைந்துள்ள மாணவனின் இல்லத்திற்கு சென்று வாழ்த்தினார்.

 

29 டிசெம்பர் 2017 அன்று  அவரது வீட்டிற்கு சென்ற ஆளுநர் பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான காசோலையினையும் குறித்த மாணவனுக்கு வழங்கி கௌரவித்தார்.

தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ள இந்த மாணவன் மேலும் முன்னேறி இந்த நாட்டிற்கும் அவரது குடும்பத்திற்கும் சேவையாற்ற வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக ஆளுநர் தெரிவித்தார்.

முன்னொரு காலம் கல்வியில் சிறந்து விளங்கிய யாழ் குடாநாடு சிறிது காலம் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருந்து வந்தது. எனினும் தற்போது யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த மாணவன் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளமை மீண்டும் கல்வியில் வடமாகாணம் முன்னேறி வருகின்றது என்ற செய்தியினை வெளிகாட்டி நிற்கின்றது.

இங்கே கல்வியில் முதலிடம் பெறுபவர்கள் பல உயர்பதவிகளை அடைந்து வெளிநாடுகளுக்கு சென்று சேவையாற்றி வருகின்றார்கள். மருத்துவத்துறையில் சிறந்து விளங்குபவர்கள் தமிழ் மருத்துவர்களே ஆனால் அவர்களில் ஒருசிலர் தமது சேவையினை தாய் நாட்டிற்கு வழங்குவது கிடையாது. தாம் பிறந்த ஊருக்கு வழங்குவது கிடையாது வேறு பகுதிகளில் சேவையாற்றுகின்றார்கள். எனவே இந்த மாணவனை போன்று கல்வியில் உயர்நிலை அடைபவர்கள் படித்து மேலே வந்து தமது பெற்றோர்களுக்கும் இந்த நாட்டிற்கும் சேவை ஆற்றவேண்டும் என ஆளுநர் தெரிவித்தார்.

யாழ் குடாநாடு மீண்டும் கல்வியில் உயர்ந்து இருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஏனைய மாணவர்களும் இவரைபோன்று கல்வியில் அதிகளவில் அக்கறை செலுத்துமாறும் ஆளுநர் வேண்டிக்கொண்டார்.

இவ்விஜயத்தின்போது ஆளுநருடன் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், உதவிச் செயலாளர் ஜே.எக்ஸ்.செல்வநாயகம், வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

 

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை