நெதர்லாந்து நிறுவனத்தை சேர்ந்த சியேஃப் லிஸ்மேன்ஸ் தலைமையிலான நிபுணத்துவம் பெற்ற ஐந்து பேர் கொண்ட டச்சு இடர் ஆய்வு பணி குழுவினர் வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்திற்கு 05.02.2018 அன்று வருகை தந்திருந்தனர்.
நெதர்லாந்து நிறுவனதின் பங்களிப்புடன் செயற்படுத்தப்படும் “யாழ்ப்பாணத்துக்கான ஆறு” செயற் திட்டத்தில் (ஆறுமுகம் திட்டம்) குடி நீர் இருப்புக்கான சாத்தியமான தீர்வுகள் பற்றியும் இதற்கான தொழிநுட்ப உதவிகள் வழங்குவது பற்றியும் இக் குழுவினருடன் கலந்துரையாடப்பட்டது.
பிரதம செயலாளர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பிரதிப்பிரதம செயலாளர் - பொறியியல் சேவைகள், மாகாணப் பணிப்பாளர் - நீர்ப்பாசனம் மற்றும் பிரதிப் பணிப்பாளர் - நீர்ப்பாசனம் (கிளிநெச்சி) ஆகியோர் கலந்து கொண்டனர்.