விவசாய அமைச்சு

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார், நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகம் திறந்து வைககப்பட்டது

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்திற்கான நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகம், பள்ளமடு, மன்னார் எனும் இடத்தில் 28 மார்ச் 2018 அன்று வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன் அவர்கள் சார்பாக கலந்து கொண்ட வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜி.குணசீலன், வடமாகாண சபை உறுப்பினர் திரு.அப்துல் நியாஸ் சீனி மற்றும் பிரதம செயலாளர், வடமாகாணம் திரு.அ.பத்திநாதன் ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தனர்.

நிகழ்விற்கு வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி.வி.பிறேமகுமார் தலைமை தாங்கினார்.

குறித்த கட்டடம் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் ரூபா 17.74 மில்லியன் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

புதிய நீர்ப்பாசனப் பொறியியலாளர் பிரிவு அலுவலகத் திறப்பு விழாவில், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன், வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல்) எந்திரி.எஸ்.சண்முகானந்தன், கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.வசீகரன், வவுனியா பிராந்திய நீர்ப்பாசனப் பணிப்பாளர் (மத்திய) எந்திரி.எஸ்.குமாரதேவன், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்டச் செயலகம் - மன்னார் திரு.எஸ்.ஸ்ரீபாஸ்கரன், கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் திரு.எஸ்.தேவகுமார், பிரதேச செயலாளர் - மாந்தை திரு.எஸ்.கேதீஸ்வரன், பிரதேச செயலாளர் - மடு திரு.எப்.சி.சத்தியசோதி, பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர்கள் - கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் திணைக்கள அலுவலர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.