செயலாளர்

 திரு.க.தெய்வேந்திரன்

செயலாளர்

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு

இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

Tel: +94-21-2217303

Fax: +94-21-2217304

Mobile: 0777811212

Email:

 

 

 

விவசாய அமைச்சு

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அம்மாச்சி பாரம்பரிய மற்றம் போசணை மிகு உணவு தயாரிப்பு மற்றம் விற்பனை நிலையம் மன்னாரில் திறந்து வைக்கப்பட்டது

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட "அம்மாச்சி' பாரம்பரிய மற்றம் போசணை மிகு உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையம்;, மன்னார், முருங்கன் பகுதியில்; 28 மார்ச் 2018 அன்று வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன் அவர்கள் சார்பாக கலந்து கொண்ட வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியக் கலாநிதி ஜி.குணசீலன் அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்ட்டது.

இந் நிகழ்விற்கு மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், திருமதி. அ. ஸ்ரீரங்கன், அவர்கள் தலைமை தாங்கினார்.

குறித்த கட்டடம் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் ரூபா 7.7 மில்லியன் மூலம் நிர்மாணிக்கப்பட்டதுடன் UNDP நிதியின் ரூபா 1.2Mn இற்கு குறித்த விற்பனை நிலையத்திற்கான தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. 

"அம்மாச்சி' பாரம்பரிய மற்றம் போசணை மிகு உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையத் திறப்பு விழாவில், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் திரு.அ.அலிக்கான் செரிப் அவர்கள், முருங்கன் பெரியபள்ளிவாசல் மௌலவி, முருங்கன் பங்குத் தந்தை, உப்புக்குளபிள்ளையார் கோவில் குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கௌரவ விருந்தினர்களாக வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் - திரு.எஸ்.சத்தியசீலன், மேலதிக மாவட்ட செயலாளர், மன்னார் - திரு.எஸ்.குணபாலன் , மாகாண விவசாயப் பணிப்பாளர், வ.மா திரு.சி.சிவகுமார், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர், வ.மா எந்திரி.வே.பிரேமகுமார்,  மாகாணப் பணிப்பாளர், கால் நடைஉற்பத்தி சுகாதாரத் திணைக்களம், வ.மா, வைத்திய கலாநிதி .எஸ்..வசீகரன்,  பிரதிப் பணிப்பாளர்-விதைகள் மற்றும் நடுகைப்பொருட்கள் அபிவிருத்தி நிலையம், வவுனியா, திரு.சி.பி.சத்தியமூர்த்தி திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலகம், மன்னார். திரு.கி.ஸ்ரீபாஸ்கரன்,  வலயக் கல்விப் பணிப்பாளர் - மன்னாh திருமதி.எஸ்.சுகந்தி,; பிரதிப் பணிப்பாளர், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் திருமதி. வைத்திய கலாநிதி.யோ.கமலேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.