விவசாய அமைச்சு

அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்களுக்கான பார்த்தீனியத்தினைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்ட ஏற்பாடுகள் பற்றிய பயிற்சிப் பட்டறை

வடமாகாண விவசாயத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்களுக்கான பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் பற்றிய பயிற்சிப் பட்டறை விவசாயப் பணிப்பாளர் திரு.எஸ்.சிவகுமார் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் 10.04.2018 அன்று நடைபெற்றது.

இச் செயலமர்வில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடியர் அதிபதி திரு.பி.குமாரரட்ணம் அவர்களும், யாழ்ப்பாண மாவட்ட அரசசட்டவாதி திரு.என்.நிசாந் அவர்களும் வளவாளர்களாக கலந்துகொண்டு வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

இப் பயிற்சிப் பட்டறையில் விருந்தினர்களாக வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.சி.சத்தியசீலன், பிரதி விவசாயப் பணிப்பாளர் திரு.எஸ்.எஸ்.வெலிகம, உதவி விவசாயப் பணிப்பாளர் திரு.ஹரிச்சந்திர நிர்மலானந்த, உதவி விவசாயப் பணிப்பாளர் (தாவர பாதுகாப்பு மற்றும் விதை அத்தாட்சிப்படுத்தல்) திருமதி சந்தியா ஹேமச்சந்திர, பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர், வவுனியா பிராந்தியம் எந்திரி என்.நவநேசன், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர்கள் திரு.பூ.உகநாதன் (கிளிநொச்சி) திரு.பொ.அற்புதச்சந்திரன் (முல்லைத்தீவு) திருமதி.அ.ஸ்ரீரங்கன் (மன்னார்), வடமாகாண விவசாய அமைச்சின் உதவிச் செயலாளர் செல்வி.கு.துசியா மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் திரு.மே.சாந்தசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர். இப் பயிற்சிப் பட்டறையில் அதிகாரமளிக்கப்பட்ட 121 உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

 

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500