செயலாளர்

 திரு.க.தெய்வேந்திரன்

செயலாளர்

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு

இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

Tel: +94-21-2217303

Fax: +94-21-2217304

Mobile: 0777811212

Email:

 

 

 

விவசாய அமைச்சு

யாழ் மாவட்ட “சுவகாஸ் மல்” அபிவிருத்திச் சங்க வருடாந்த ஒன்றுகூடலும் வேலைப்பட்டறையும்

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பூங்கனியியல் உற்பத்தியாளர்களின் பூங்கன்றுகளின் தரத்தையும், உற்பத்தியையும் அதிகரிக்கும் நோக்குடன் யாழ் மாவட்ட சுவாகாஸ் மல் அபிவிருத்திச் சங்கத்தினால் வருடாந்த ஒன்றுகூடலும் வேலைப்பட்டறையும் கடந்த 19–20, ஏப்பிரல் 2018 அன்று ஒழுங்கு செய்யப்பட்டது.

இந்நிகழ்விற்கு யாழ் சுவாகாஸ் மல் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் நா.கனகரட்ணம் தலைமைதாங்கினார்.

ஆரம்ப நிகழ்வில் விருந்தினர்களாக, தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், டாக்டர் (திருமதி) எஸ்.எ.கிருஸ்ணராஜா, தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கே.வை.நாணயக்கார, வடமாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.சிவகுமார், மற்றும் பூங்கனியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எம்.டி.யே.சேனாரத்ன ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

வேலைப்பட்டறையின் வளவாளராக, பூங்கனியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின், ஆராய்ச்சி உதவியாளர் எ.யோகராஜா கலந்துகொண்டு பூங்கனியில் உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்புக்கள், உற்பத்தியாளர், விற்பனையாளர்களுக்கு இடையிலான இணைந்த செயற்பாடுகள், உள்ளுர் மற்றும் ஏற்றுமதி நோக்கிலான உற்பத்திக்கான வழிகாட்டல்களும் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடுகள் தொடர்பாக கருத்துக்களை வழங்கியிருந்தார்.

இந்நிகழ்வில் யாழ் மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட அலங்கார நாற்றுமேடை உற்பத்தியாளர்கள் கலந்து பயன்பெற்றார்கள்.