விவசாய அமைச்சு

வவுனியா மாவட்டத்திற்கான விசேட விவசாய ஊக்குவிப்புத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

விவசாய ஊக்குவிப்பு விசேட செயற்றிட்டத்தினை அங்குரார்ப்பண வாரத்தினை முன்னிட்டு “ஒன்றாய் எழுவோம் சிறுபோகத்தை வெல்வோம்” எனும் தொனிப்பொருளில் சூழல்நேய பேண்தகு விவசாய விரிவாக்க கோட்பாட்டின் அடிப்படையில் மீள்பாவனை சக்திவளமான சூரியசக்தியை பயன்படுத்தி

சூரியகலநீர் இறைக்கும் இயந்திரபாவனையும்  காலநிலை மாறுபாட்டினை வெற்றிகொள்ளும் வகையில் சூரியசக்தியை பயன்படுத்தி தூவல் நீர்ப்பாசன (Gun Sprinkler) பாவனையும் அறிமுகப்படுத்தும் செயற்றிட்டம் பம்பைமடு விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள பூவரசங்குளம் கிராமத்தில் 23.04.2018 ஆம் திகதியன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர்  தெ.யோகேஸ்வரன் அவர்கள் சூழல்நேய பேண்தகு விவசாய அபிவிருத்தியின் நோக்கம், முக்கியத்துவம், தேவைப்பாடு மற்றும் மீள்பாவனை சக்தியின் உச்சப் பாவனை தொடர்பாகவும் இன்றைய காலத்தின் காலநிலை மாறுபாட்டினை எதிர்கொள்ள வேண்டிய தேவைப்பாடு பற்றியும் எடுத்துரைத்தார்.

இச் செயற்றிட்ட நிகழ்வில் திணைக்கள உத்தியோகத்தர்கள் விவசாயப் பெருமக்கள் அடங்கலாக 125 பேர் கலந்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தின் நிதியீட்டத்தின்கீழ் சூரியகல நீர் இறைக்கும் இயந்திரங்கள் அரைமானிய அடிப்படையில் (ரூபாய் 168,250 ) வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.