விவசாய அமைச்சு

பிரமாண அடிப்படையிலான மாகாண மூலதன நன்கொடை நிதிக்குரிய விவசாய உபகரணங்கள் வழங்கல்

வடக்கு மாகாணசபை உறுப்பினரான ம.தியாகராஜா அவர்களினால்  சமர்ப்பிக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான மாகாண மூலதன நன்கொடை நிதிக்குரிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட விவசாயிகளிற்கு விவசாய உபகரணங்கள் 24.04.2018 அன்று வழங்கப்பட்டன.

இந்நிகழ்விற்கு வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன் தலைமைதாங்கினார்.

இந்நிகழ்வில் விருந்தினரர்களாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா அவர்களும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்கள் பொ. மங்களநாதன் மற்றும்  ப.சத்தியநாதன் ஆகியோர் பங்கற்றனர்.

இவ் உபகரணங்களின் உதவி மூலம் வசாயிகளினது விவசாய நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுவதுடன் அவர்களது வாழ்க்கைத் தரம்; உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.