chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

மாகாண உள்ளக கணக்காய்வு அலுவலகத்திற்கான புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது

கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை கட்டிடதொகுதி வளாகத்தில் தலைமை அலுவலகம் மற்றும் யாழ் மாவட்ட உப அலுவலகம் ஆகியவற்றிற்காக புதிதாக  நிர்மாணிக்கப்பட்ட மாகாண உள்ளக கணக்காய்வு அலுவலகத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு 03 மே 2018 ஆம் திகதியன்று நடைபெற்றது.

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தை இந்து மத தலைவரின் ஆசியுடன் சம்பிரதாயபூர்வமாக காலை 9.55 அணியளவில் திறந்து வைத்தார்.

மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதி பிரதம செயலாளர்கள், பிரதான உள்ளக கணக்காய்வாளர் திருமதி. எஸ்.சுரேஸ்ஜினி, ஏனைய உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட உப அலுவலகங்களின் உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.