chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

சமாதானத்தை கட்டியெழுப்பும் முன்னுரிமை திட்டத்திற்கான (PPP) மீளாய்வு கூட்டம்

சமாதானத்தை கட்டியெழுப்பும் முன்னுரிமை திட்டத்திற்கான மீளாய்வு கூட்டம் பிரதம செயலாளர் அ.பத்திநாதன் தலைமையில் கைதடியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் 16 மே 2018 ஆம் திகதியன்று நடைபெற்றது.

இத்திட்டத்தின் மூலோபாய முன்னுரிமைகள், PBF நிதியளிப்பு முன்னுரிமைகள் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் முன்னுரிமைகளை முதன்மைப்படுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராயப்பட்டதுடன் நீண்டகால தாக்கங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களை ஆராயப்பட்டன.

துஸாந்தி பெனான்டோ திட்ட ஒருங்கிணைப்பு நிபுணர், ஐ.நா.வின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம், நிஸான் டிமெல் சமாதானத்தை கட்டியெழுப்பும் முன்னுரிமை திட்டத்திற்கான ஆலோசகர், வெறைற் றிஸேச், காயத்திரி குமரன்- கள இணைப்பு அலுவலர், ஐ.நா.வின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம், வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்ட செயலகங்களின் மேலதிக மாவட்ட செயலாளர்கள் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர்கள், மாகாண அமைச்சின் செயலாளர்கள் மற்றும் பிரதிப் பிரதம செயலாளர்கள் நிதி மற்றும் திட்டமிடல், சுகாதாரம், கல்வி, சமூக சேவை மற்றும் கிராம அபிவிருத்தி திணைக்களங்களின் மாகாணப் பணிப்பாளர்கள்  ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.