செயலாளர்

 திரு.க.தெய்வேந்திரன்

செயலாளர்

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு

இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

Tel: +94-21-2217303

Fax: +94-21-2217304

Mobile: 0777811212

Email:

 

 

 

விவசாய அமைச்சு

மன்னார் மாவட்டத்திற்கான விசேட விவசாய ஊக்குவிப்புச் வேலைத்திட்டம்

மன்னார் மாவட்டத்திற்கான விசேட விவசாய ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தின் முதலாவது நிகழ்வு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பணிமனையால் 24.04.2018 அன்று உயிலங்குளம், மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. 

மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண விவசாய அமைச்சின், அமைச்சர் கந்தையா சிவநேசன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜி.குணசீலன் அவர்களும் விருந்தினர்களாக வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளார் சி.சத்தியசீலன், விவசாயப் பணிப்பாளர் நாயகம், கலாநிதி டபிள்யு. எம். டபிள்யு. வீரக்கோன், தேசிய விவசாய தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் மையத்தின் பணிப்பாளர் ஸ்ரீரங்கன் பெரியசாமி, விவசாயத் திணைக்களத்தின் (ஆராய்ச்சி) மேலதிகப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.ஜே.அரசகேசரி மற்றும் மாகாண விவசாயப் பணிப்பாளர், சு.சிவகுமார் ஆகியோர் கலந்துசிறப்பித்தார்கள். நிகழ்கவில் பொதுமக்கள், விவசாயிகள், விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்டங்கலாக 150 இற்கு மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர்