கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

”மரக்கன்றை நடுவோம் யுகத்தை தொடங்குவோம்” எனும் தொனிப் பொருளில் உலக சுற்றுச்சூழல் தினம் வடக்கில் கொண்டாடப்பட்டது

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வட மாகாணத்தில் யாழ் நகரத்தை மையமாகக் கொண்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சித் திட்டங்கள் பல ”மரக்கன்றை நடுவோம் யுகத்தை தொடங்குவோம்” எனும் தொனிப் பொருளில் வட மாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே அவர்களின் தலைமையில் 05 யூன் 2018 அன்று திகதி பண்ணை கோட்டை பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வின்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர் அவர்கள் மரக்கன்று நடுவது போல் அதன் பராமரிப்புப் பணிகள் மற்றும் பாதுகாக்கும் பணிகள் மாநகர சபையினால் மேற்கொள்ளப்படும் எனவும் இன்னும் சில வருடங்களில் யாழ் நகரத்தை பசுமை நகராக அழகுபடுத்துவதற்கு நாம் முன்வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.   

சமயத் தலைவர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன், மாகாண விவசாய அமைச்சர்  கந்தையா சிவநேசன், மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன், யாழ் மாநகர சபை முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட்,  இந்திய துணைத் தூதுவர் எஸ். பாலசந்திரன், வட மாகாண சபை உறுப்பினர்கள்,உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், யாழ் அரச அதிபர், வட மாகாண பிரதம செயலாளர், அமைச்சின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், யாழ் மாநகரசபை ஆணையாளர், அரச உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் முப்படைகளின் உயர் அதிகாரிகள் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

இதில் புன்னை, பலா, மா, வேம்பு, தேக்கு, ஜம்பு, மகோகனி ஆகிய 6000 மரக்கன்றுகள் நடுவதற்கு முப்படையினர் மற்றும் காவல்துறையினர் தங்களது ஆதரவினை வழங்கியதோடு விவசாய திணைக்களம், வன வள திணைக்களம் நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் யாழ் மாநகர சபையின் பங்களிப்புடன் இந் நிகழ்வு மிக வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

யாழ் பிரதேச 16 பாடசாலைகளில் மரக்கன்று நடப்பட்டதோடு யாழ் நகர சபை எல்லைக்குட்பட்ட  பகுதிகளிலும் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன..

இந் நிகழ்விற்காக அரசியல் பிரமுகர்கள் அரச அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் சாரணர் குழுக்கள் தங்களது பங்களிப்பினை வழங்கினர். 

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை