விவசாய அமைச்சு

பருமல்லாத காலங்களில் வலைக் கூடாரங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளல் தொடர்பாக கண்டிக்கான களவிஜயம்

விவசாயிகள் வழமையாக பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை அந்த அந்தப் பயிர்களுக்குரிய பருவ காலங்களிலேயே மேற்கொண்டு வருகின்றனர், ஆனால் நவீன விவசாய ஆய்வுகளின் ஊடாக நாட்டின் பல இடங்களில் பருவமல்லாத காலங்களிலும் குறித்த பயிர்களை செய்கைக்குட்படுத்தி நல்ல விளைச்சலைப் பெறுவதுடன் அதிக வருமானத்தினையும் ஈட்டி வருகின்றனர். 

எனவே அவ்வாறன பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை வடமாகாண விவசாயிகள் நேரடியாக பார்வையிட்டு, அந்த முயற்சியில் அவர்களும் ஈடுபட்டு பயனடைவதற்கு ஏதுவாக, வடமாகாண விவசாயத் திணைக்களத்தினால், 23.04.2018 அன்று கண்டி மாவட்டத்திலுள்ள தொலுவ பிரதேசத்திற்கு களவிஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 

அக் களவிஜயத்திற்கு பருவமல்லாக் காலங்களில் கூடரங்களில் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளக்கூடிய வலுவுடைய யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 11 விவசாயிகளும் விவசாயத் திணைக்களத்தைச் சேர்ந்த 11 உத்தியோகத்தர்களும் பங்குபற்றியிருந்தார்கள். இக்கள விஜயத்தின் போது, கூடாரப் பயிர்ச்செய்கையின் போது பச்சை வீட்டினுள் வெப்பநிலை சார் ஈரப்பதனை பேணுவதற்கு மேற்கொள்ளக்கூடிய நவீன தெழில்நுட்பங்கள், அத் தொழில்நுட்பத்தை பிரயோகிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் செயற்பாடுகள் என்பன செய்முறை விளக்கங்களுடன் வழங்கப்பட்டன.