பணிக்கூற்று
வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.
வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.
களுத்துறை மாவட்டத்திலிருந்து 18 யூன் 2018 அன்று வருகை தந்திருந்த மூத்த பொலிஸ் பிரஜைகள் குழுவினர் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அவர்களை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது யாழ் குடாநாட்டில் விசேட தேவையுடையவர்களுக்கு வேண்டிய அதிநவீன சக்கர நாற்காலிகள் இரண்டினை ஆளுநரிடம் கையளித்தனர். இச்சக்கர நாற்காலிகள் ஆளுநரின் ஆலோசனைக்கு அமைவாக ஆளுநர் அலுவலக அதிகாரிகள் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக எடுத்துச் சென்று கையளித்துள்ளனர்.
மூத்த பொலிஸ் பிரஜைகள் குழுவினர் மத்தியில் கருத்து வெளியிட்ட ஆளுநர், ”களுத்துறை மாவட்த்திலிருந்து நீங்கள் இவ்வாறான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. வடபகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தென்னிலங்கை மக்கள் உங்களை போன்று இயன்ற அளவு உதவிகளை செய்ய முன்வர வேண்டும். வட பகுதி மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றவர்களை மதிக்கும் பண்பு கொண்டவர்கள். அவர்களின் நல்ல உள்ளங்களை புரிந்து கொண்டு அந்த செய்தியினை நீங்கள் தென்னிலங்கை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதன் ஊடாகவே பல பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும்” என தெரிவித்தார்.