விவசாய அமைச்சு

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது

ஆசிய அபிவிருத்தி வங்கியினதும் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினதும் பங்களிப்புடன்; 47.58 மில்லியன் ரூபா நிதியீட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனை, முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் புதிய கொலனி வீதியில் 18 யூன் 2018 அன்று வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் சுபநேரத்தில் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

திணைக்களத்தின் பெயர்ப் பலகையினை வடமாகண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் அவர்கள் திரைநீக்கம் செய்துவைத்தார். 

இந்நிகழ்விற்கு வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.க.தெய்வேந்திரம் தலைமை தாங்கியதுடன் நன்றியுரையினை மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி.வி.பிறேமகுமார் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்விற்கு வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர்கள் து.ரவிகரன், இ.இந்திரராஜா, வடமாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் கல்வி அமைச்சின் செயலாளர் திரு.சி.சத்தியசீலன், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி.ரூபினி வரதலிங்கம், பிரதிப் பிரதம செயலாளார் (பொறியியல் சேவைகள்) எந்திரி.எஸ்.சண்முகானந்தன், மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்சிவகுமார், மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.வசீகரன், வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் எந்திரி.எஸ்சிவராஜலிங்கம் ஆகியோரும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர்கள், மாவட்டநிலை நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் மற்றும் திணைக்கள அலுவர்கள் கலந்து சிறப்பித்தனர்.