செயலாளர்

 திரு.க.தெய்வேந்திரன்

செயலாளர்

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு

இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

Tel: +94-21-2217303

Fax: +94-21-2217304

Mobile: 0777811212

Email:

 

 

 

விவசாய அமைச்சு

JICA திட்ட குழுவினர் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திற்கு வருகை

JICA திட்ட பிரதிநிதிகள் மற்றும் நிபுணர் குழுவினர் கடந்த 26.06.2018 முதல் 13.07.2018 வரை  வடமாகாணத்தின் பால் உற்பத்தி அபிவிருத்தி தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் முகமாக கள விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.

வடக்கு மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட பால் உற்பத்தி அபிவிருத்தி தொடர்பான (Dairy Development Project) 4 வருடங்களுக்கான திட்ட முன்மொழிவானது JICA நிறுவனத்தினரால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தது. இக்குழுவினரின் விஜயமானது திட்டத்தின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக அடிப்படைத் தரவுகள் சேகரித்தல் மற்றும் தொழிநுட்பம் சார் ஆலோசனைகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

இவ்விஜயத்தின் ஒரு பகுதியாக 02.07.2018 அன்று மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்திற்கு விஜயம் விஜயம் மேற்கொண்டிருந்தனர். அங்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சர்  கந்தையா சிவநேசன், மாகாணப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் மற்றும் சிரேஸ்ட கால்நடை மருத்துவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தியிருந்தனர். 

இக் கலந்துரையாடலில் திணைக்களத்தின் கட்டமைப்பு, பால் உற்பத்தி தொடர்பான தற்போதைய நிலைமை, பால் சேகரிப்பு விபரங்கள் போன்ற அடிப்படையான விடயங்கள் மற்றும் தொழிநுட்ப விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இச்சந்திப்பினை தொடர்ந்து 03.07.2018 அன்று மேற்படி குழுவின் அங்கத்தினர்கள் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்களுடனான சந்திப்பு ஒன்றினையும் மேற்கொண்டிருந்தனர். அச்சந்திப்பில் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் , பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்) திரு.ஆர்.உமாகாந்தன் மற்றும் பிரதம செயலாளர் அலுவலக பிரதம கணக்காளர் திரு.என்.ஜெயகணேஷ் ஆகியோரும் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி குழுவினர் தொடர்ந்தும் வடபகுதியில் தங்கியிருந்து திட்டம் தொடர்பாக பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது.