விவசாய அமைச்சு

மருதமடு குளத்தில் நன்னீர் மீன்குஞ்சுகள் வைப்பிலிடப்பட்டன

விவசாய அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக்கான நிதியின் கீழ் நன்னீர் மீன்பிடியினை அபிவிருத்தி செய்யும் முகமாக மருதமடு குளத்தில் ரூபா.300,000.00 பெறுமதியான மீன்குஞ்சுகள் 07 யூன் 2018 அன்று வைப்பிலிடப்பட்டன.

மீன்குஞ்சுகள் வைப்பிலிடும் போது வடக்கு மாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் அவர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டார். அமைச்சின் மேற்பார்வை உத்தியோகத்தர் மற்றும் தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.