பிரதம செயலாளர் செயலகம்

கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட பாலம் மக்கள் பாவனைக்கென கையளிக்கப்பட்டது

வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட பச்சைப்புல்மோட்டை வீதிப்பாலம் கரைதுரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் ஆ.புவனேஸ்வரன் ஆகியோரால் 12 யூலை 2018 அன்று வைபவ ரீதியாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.