செயலாளர்

 திரு.க.தெய்வேந்திரன்

செயலாளர்

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு

இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

Tel: +94-21-2217303

Fax: +94-21-2217304

Mobile: 0777811212

Email:

 

 

 

விவசாய அமைச்சு

“10 கோடி ஏற்றுமதிப்பயிர் நாட்டுவதற்கான பாரிய திட்டத்தின் அடுத்தபடி”எனும் திட்டத்தின், வடமாகாணத்திற்கான ஊக்குவிப்பு ஆரம்பநிகழ்வு

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் “10 கோடி ஏற்றுமதிப் பயிர் நாட்டுவதற்கான பாரிய திட்டத்தின் அடுத்தபடி” எனும் திட்டத்தின் கீழ் Tom E.J.C மாமரக் கன்றுகள் மற்றும் பெரிய வெங்காயச் செய்கை ஊக்குவிப்பு நிகழ்வு 07.07.2018 அன்று திருநெல்வேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் தலைமைதாங்கினார்.

இந் நிகழ்விற்கு சமூகநலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயாhகமகே பிரதம விருந்தினராக கலந்துகொண்டார், சிறப்பு விருந்தினர்களாக யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலாம கேஸ்வரன், வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். கௌரவ விருந்தினர்களாக சமூகநலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் .பந்துலவிக்கிரம, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் .நா.வேதநாயகன், சமூகநலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் றண்சிலுவட்டவல, பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் திருமதி அ.ஸ்ரீரங்கன், வடமாகாண விவசாய அமைச்சின் உதவிச் செயலாளர் பா.முகுந்தன், திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி கலாநிதி .தி.கருணைநாதன், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.நி.செல்வராணி, பிரதி விவசாயப் பணிப்பாளர் (விதைகள் மற்றும் நடுகைப் பொருட்கள்) எஸ்.சதீஸ்வரன், கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் என்.நிசாந்தன் மற்றும் பயிர்க்காப்புறுதி நிறுவன உதவிப் பணிப்பாளர் து.கிரிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேற்படி திட்டத்தின் பிரகாரம் வடக்கு மகாணத்திலுள்ள விவசாயிகளிற்கு 1100 கிலோகிராம் பெரிய வெங்காய விதைகளும், ஒரு பயனாளிக்கு தலா 25 Tom E.J.C மாங்கன்றுகள் எனும் அடிப்படையில் 820 பயனாளிகளுக்க 20,500 மாங்கன்றுகளும் இலவசாமாக வழங்கிவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.