பிரதம செயலாளர் செயலகம்

கிளிநொச்சி மாவட்டத்தில் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாலங்கள் மக்கள் பாவனைக்கென கையளிக்கப்பட்டன

வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல்நகர், கனகாம்பிகைக்குளம், திருநகர், ஜெயந்திநகர், கண்டாவளை புன்னைநீராவி, கல்லாறு பிரதேசங்களில் அமைக்கப்பட்ட 12 பாலங்கள் கரைச்சிப்பிரதேச உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் வடக்கு மாகாண சபையின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர்களான த.குருகுலராசா மற்றும் சு.பசுபதிப்பிள்ளை அவர்களால் 27 யூலை 2018 அன்று வைபவ ரீதியாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டன.