கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 30 பேருக்கு பட்டதாரி நியமனம்

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 30 பேருக்கு பட்டதாரி நியமனம் வழங்கப்பட்டமை மிகுந்த மகிழ்சி அளிப்பதாக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கான அரச நியமனங்கள் அலரிமாளிகையில் 20 ஆகஸ்ட் 2018 அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் தனது மகிழ்சியை தெரிவித்து அவர் அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புலிகள் அமைப்பிலிருந்து இறுதி யுத்தத்தில் சரணடைந்த போராளிகள் புனர்வாழ்வின் பின்னர் தமது உறவினர்களுடன் இணைந்து கொண்டனர். அவர்களில் பட்டதாரிகளாக காணப்பட்ட பலர் கடந்த 2017ம் ஆண்டு ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள எனது அலுவலகத்தில் என்னை சந்தித்து ஒரு கோரிக்கையினை முன்வைத்திருந்தனர். அதாவது பட்டதாரிகளுக்கான அரச பணி நியமனங்களில் தமது பெயர்களும் உள்வாங்கப்படவேண்டும் என்பதாகும்.

அதற்கு அமைய 26 யூலை 2017   அன்று அமைச்சர் சுவாமிநாதன் அவர்களுக்கு நான் எழுத்து மூலம் முன்வைத்த ஆலோசனையினை ஏற்று அமைச்சர் அமைச்சரவை பத்திரத்தினை முன்வைத்து நிறைவேற்றி இப்போராளிகளுக்கும் அரச பணி நியமனத்தினை வழங்கியிருக்கின்றார். அவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஏற்கனவே கடந்த வருடம் 35 புனர்வாழ்வு பெற்ற போராளிகள் பட்டதாரிகள் நியமனத்தில் உள்வாங்கப்பட்டு அரச பணிக்கு அமர்த்தப்பட்டார்கள். மேலும் இரண்டாம் கட்டமாக 30 புனர்வாழ்வு பெற்ற போராளிகள் அரச பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றார்கள்.

சமாதானத்திற்கு இது ஒரு முன்னேற்றகரமான சம்பவமாக அமைக்கின்றது. இதுபோன்று மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரச சேவைகள் கிடைக்க எனது முழு ஒத்துழைப்பினையும் வழங்கவுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை