பிரதம செயலாளர் செயலகம்

வட மாகாண நிதி முகாமைத்துவ செயல்திறன் விருது வழங்கும் விழா மற்றும் மதிப்பீட்டு அறிக்கை வழங்கல் - 2017

வட மாகாணத்தின் நிதி மற்றும் நிதி முகாமைத்துவத்தை வலுப்படுத்தும் பொருட்டு, மாகாண திறைசேரியின் பொதுநிதி கட்டப்பாட்டு அலகு, பிரதம செயலாளர் செயலகம் வட மாகாணம் இனால் முதல் தடவையாக வட மாகாண அரச நிறுவனங்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் 'நிதி முகாமைத்துவ செயல்திறன்' இற்கான விருது வழங்கும் நிகழ்வானது 30 ஆகஸ்ட் 2018 ஆம் திகதி அன்று  சரஸ்வதி ஹால், யாழ்ப்பாணம் இல் நடைபெற்றது.

இவ் விருது வழங்கும் நிகழ்விற்கு பிரதம செயலாளர், வட மாகாணம் ஏ.பத்திநாதன் அவர்கள் தலைமை தாங்கினார். பிரதம விருந்தினராக முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பங்கேற்றார். வட மாகாண சபையின் அவைத்தலைவர், ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலய முதன்மை செயலாளர், நிதி ஆணைக்குழுவின் தலைவர், பணிப்பாளர் - ஆசிய நிறுவனம்,  கிராமிய பொருளாதார நிபுணர் - உலக வங்கி மற்றும் APFASL இன் தலைவர் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மாகாண சபைகளின் முதன்மை அலுவலர்கள், செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உள்ளூர் அதிகாரசபையின் தலைவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.

26 மாகாண அரச நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அதிகார சபைகள் சிறந்த செயல்திறன் மட்டத்தினை பெற்றிருந்தன மற்றும் 10 மாகாண அரச நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அதிகார சபைகள் திருப்திகரமான செயல்திறன் சான்றிதழ் வழங்கப்பட்டது.