Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் மறுசீரமைப்பு திட்டத்தின் அலுவலர்களுடன் சந்திப்பு

பிரதம செயலாளர் செயலகம்

சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் மறுசீரமைப்பு திட்டத்தின் அலுவலர்களுடன் சந்திப்பு

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO)-EGLR இணைந்து ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க கருத்திட்டத்தின் ஊடாக உள்ளூர் வலுவூட்டல் கருத்திட்டம் தொடர்பான பூர்வாங்க ஆலோசனைக் கூட்டம் வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் தலைமையில் பிரதம செயலாளர் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் 11 செப்டெம்பர் 2018 ஆம் திகதி நடைபெற்றது.

வாழ்வாதார உதவிகள் மற்றும் நல்லிணக்கத்திற்கூடான பொருளாதார விருத்தியை மேன்படுத்தும் திட்டம்(EGLR) அமுல்படத்தல் தொடர்பான விடயங்களை ILO- EGLR திட்டத்தின் முதன்மை அதிகாரிகள்,  விவசாயம், கூட்டுறவு, கைத்தொழில் மற்றும் சமூக சேவைகள் ஆகியதுறைகளின் வடமாகாண அதிகாரிகள் ஆகியோர் இக் கலந்துரையாடலில் கலந்துரையாடினர். 

இத்திட்டத்தினூடாக வட மாகாணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களின் இலக்கு குழுக்களிற்கான வலுவூட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் நிலைபேறான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நான்கு வருட காலத்திற்கான  6.7 மில்லியன் டொலர்களை நிதியீட்டமாகக் கொண்ட கருத்திட்டத்தில் கூட்டுறவு, கைத்தொழில்கள், விவசாயம் ஆகியவற்றின் துறைகளின் திட்ட செயற்பாடுகள் குறித்தும் இத்திட்டத்திற்கான உள்ளீடுகளை மாகாண திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்கள் வழங்குவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.