chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சாரதிகள் மற்றும் பிற திணைக்களம்சார் சேவை பதவியணியினருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன

வட மாகாண இணைந்த சேவை பதவியணிகளான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை (பயிலுனர் தரம்), சாரதிகள் சேவை மற்றும் மகளிர் விவகார அமைச்சின் கீழ்வரும் ஏனைய திணைக்களம்சார் சேவை பதவியணியினருக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வானது யாழ்ப்பாண பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் 17 செப்ரெம்பர் 2018 ஆம் திகதியன்று நடைபெற்றது . இந் நிகழ்விற்கு வட மாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே பிரதம விருந்தினராக பங்கேற்றதுடன் அலுவலர்களுக்கு நியமனக் கடிதங்களையும்  வழங்கிவைத்தார்.

வடக்கு மாகாண சபையின் கீழ் உள்ள அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் நிலவிவந்த 134 வெற்றிடங்களை பூர்த்தி செய்யவதற்காக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை (பயிலுனர் தரம்) – 73

சாரதிகள் சேவை – 42

மகளிர் விவகார அமைச்சின் கீழ்வரும் ஏனைய திணைக்களம்சார் சேவை பதவியணி - 19

  1. பரிசாரகர் – 10
  2. சமையலாளர் – 01
  3. மின்னியலாளர் – 01
  4. தொழிலாளி – 05
  5. சுகாதாரத் தொழிலாளி – 01
  6. காவலாளி – 01