ஆளுநர்

 

கௌரவ
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

தமிழ்நாடு அரசு சார்பில் 4கோடி இந்திய ரூபாய் பெறுமதியான புத்தகங்கள் யாழ் நூலகத்திற்கு வழங்கப்பட்டது.

இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனின் ஏற்பாட்டில் தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் திரு. செங்கோட்டையன் 18 செப்ரெம்பர் 2018 அன்று யாழ்ப்பாணம் வருகை தந்து யாழ் நூலகத்திற்கு 4கோடி இந்திய ரூபாய் பெறுமதியான ஐம்பதாயிரம் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.

கடந்த காலங்களில் உணவு உடை போன்ற பலவற்றை இலவசமாக தமிழ் நாடு அரசு வழங்கியிருந்தாலும் அவற்றிக்கு மேலாக இன்று அறிவினை இலவசமாக வழங்க வந்திருப்பது வரவேற்கத்தக்கது என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது ஆளுநர் பல்வேறு கருத்துக்களை  தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலசிறி ஆறுமுக நாவலர் சுவாமி விவேகானந்தர் ஆகியோர் பல புத்தகங்களை எழுதியுள்ளனர். அவர்கள் மரணித்துவிட்டனர் ஆனால் அவர்களின் அனுபவங்கள் அவர்களின் புத்தகங்களுக்குள் இருக்கின்றது. நான் அவர்களின் புத்தங்களை கையில் எடுத்துச் செல்லும்போது அவர்களின் அறிவை எடுத்துச் செல்வதாக உணர்கின்றேன். 

சிறுவயதிலே எல்லா அனுபவங்களையும் நாம் எடுத்துவிடமுடியாது ஆனால் அவர்கள் எழுதிய புத்தகங்களை படிப்பதன் ஊடாக பல அனுபவங்களை நாம் கற்றுக்கொள்ள முடியும். அதனால் எமது வாழ்க்கையினை நல்லபடியாக கொண்டு செல்ல முடியும்.

ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்திலும் வடமாகாணத்தில் பாரிய அபிவிருத்திகளை செய்யவில்லை தென்பகுதியிலேயே பெரியளவிலான அபிவிருத்திகளை செய்தார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் கல்வி தரம் உயர்ந்து இருந்தது. இங்கே கற்றவர்கள் பெரியவர்களாகி பல உயர்பதவிகளை இருந்தார்கள். அந்த நிலை தொடர வேண்டும் எனவும் ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

 

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb