செயலாளர்

 திரு.க.தெய்வேந்திரன்

செயலாளர்

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு

இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

Tel: +94-21-2217303

Fax: +94-21-2217304

Mobile: 0777811212

Email:

 

 

 

விவசாய அமைச்சு

மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பணிமனைக்கான புதிய கட்டடம் திறந்துவைக்கப்பட்டது

மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பணிமனைக்கான புதிய கட்டடம், 2016 மற்றும் 2017 ஆண்டுகளுக்கான மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபா 21.00 மில்லியன் செலவில் உயிலங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டது.

இப்புதிய கட்டடத்தின் திறப்பு விழா, மண்பரிசோதனை ஆய்வுகூட திறப்பு விழா, நெல் சுத்தகரிப்பு நிலைய அங்குராற்பண விழா மற்றும் மன்னார் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் மாற்றீட்டுப் பயிர்ச் செய்கைத் திட்டத்தின் கீழ் வயல் நிலத்தில் விளைவிக்கப்பட்ட பயறு அறுவடை விழா என்பன 02.08.2018 அன்று மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிகளை மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்.

குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண விவசாய அமைச்சின் அமைச்சர் கந்தையா சிவநேசன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும், வடமாகாண சுகாதார அமைச்சின் அமைச்சர் (வைத்தியக் கலாநிதி) ஞா.குணசீலன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்வில் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ், வடமாகாண விவசாய அமைச்சின் உதவிச் செயலாளர் செல்வி.கு.துசியா, வவுனியா பிராந்திய பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி.ந.நவனேசன், வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி.த.ராஜகோபு, மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் பா.தேவரதன் ஆகியோரும் மன்னார் மாவட்டத்தின் ஏனைய அரச, அரசசார்பற்ற நிறுவனங்களது பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.