விவசாய அமைச்சு

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள கள அலுவலர்களுக்கு மானியத்திட்டத்தின் கீழ் மோட்டார் சைக்கிள்கள் வழங்கிவைக்கப்பட்டது

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழ், ஐந்து மாவட்டங்களிலும் கடமையாற்றும் தலா நான்கு(04) கள அலுவலர்களுக்கு (விவசாயப் போதனாசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்) 2018 ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து மானிய அடிப்படையில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு 30 யூலை 2018 அன்று நாவலர் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள வடமாகாண விவசாய அமைச்சரின் அலுவலகத்தில் வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண விவசாய அமைச்சின் அமைச்சர், கந்தையா சிவநேசன் அவர்களும். சிறப்பு விருந்தினராக வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் க.தெய்வேந்திரம் அவர்களும் கலந்துகொண்டனர்.  இந்நிகழ்வில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மாhகாணப் பணிப்பாளர் எந்திரி.வே.பிறேமகுமார், கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சி.வசீகரன், விவசாய அமைச்சின் உத்தியோகத்தர்கள், விவசாயத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.