சுகாதார அமைச்சு

வடக்கு, கிழக்கு மாகாண சுகாதார திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெற் சுற்றுப்போட்டி இடம்பெற்றது

யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமணையின் விளையாட்டுக் கழகமும் ஊழியர் நலன்புரிச் சங்கமும் இணைந்து நடாத்திய வடக்கு, கிழக்கு மாகாண சுகாதார திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெற் சுற்றுப்போட்டி 2018 செப்டம்பர் மாதம் 21ம் மற்றும் 22ம் திகதிகளில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். 

இதில் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த திருகோணமலை பொது வைத்தியசாலை விளையாட்டு அணிக்கு வடக்கு மாகாண சுகாதார,  சுதேச வைத்திய அமைச்சின் செயலாளர் திருவாகரன் வெற்றிக் கிண்ணத்தை வழங்கிவைத்தார். இரண்டாம் இடத்தைப் பெற்ற கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கான வெற்றிக் கிண்ணத்தை யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி க.நந்தகுமாரன் வழங்கி வைத்தார்.