செயலாளர்

திரு.சி.சத்தியசீலன்
கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர்

கல்வி அமைச்சு அலுவலகம்,
செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை

 

தொ.இல: 021-221 9259

தொ.நகல்: 021-222 0794 கைபேசி: 0774933994

மின்னஞ்சல்:

sathiyaseelan1964@gmail.com

பணிக்கூற்று

கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறைசார் செயற்பாடுகளில் ஓருங்கிணைப்பினையும் வழிகாட்டலையும் உறுதிப்படுத்தும் கொள்கைகளை உருவாக்குதலும், தனியாள் விருத்தி கட்டியெழுப்பப்படுவதை உறுதிப்படுத்தலும், வடமாகாணத்தில் சமநிலை ஆளுமையுள்ள சமுதாயத்தை தோற்றுவித்தல்.

செய்திகளும் நிகழ்வுகளும்

கல்வி அமைச்சு

வட மாகாண மரபுரிமைகள் நிலையம் முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.

வட மாகாண மரபுரிமைகள் நிலையம் வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் 18 ஒக்ரோபர் 2018 அன்று  திறந்து வைக்கப்பட்டது.

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வு வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிலையம் நல்லூர் ஸ்தான சி.சிச.த.க. பாடசாலையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வினைத் தொடர்ந்து முதலமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் பா.அபிராமி, அமைச்சின் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.