செயலாளர்

திரு.சி.சத்தியசீலன்
கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர்

கல்வி அமைச்சு அலுவலகம்,
செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை

 

தொ.இல: 021-221 9259

தொ.நகல்: 021-222 0794 கைபேசி: 0774933994

மின்னஞ்சல்:

sathiyaseelan1964@gmail.com

பணிக்கூற்று

கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறைசார் செயற்பாடுகளில் ஓருங்கிணைப்பினையும் வழிகாட்டலையும் உறுதிப்படுத்தும் கொள்கைகளை உருவாக்குதலும், தனியாள் விருத்தி கட்டியெழுப்பப்படுவதை உறுதிப்படுத்தலும், வடமாகாணத்தில் சமநிலை ஆளுமையுள்ள சமுதாயத்தை தோற்றுவித்தல்.

செய்திகளும் நிகழ்வுகளும்

கல்வி அமைச்சு

வட மாகாண தமிழர் நாகரீக மைய கருத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு முதலமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வட மாகாண தமிழர் நாகரீக மைய கருத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் 18 ஒக்ரோபர் 2018 அன்று  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வு வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. 

இம்மையம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அம்பாள்புரம் பிரதேசத்தில் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மதகுருமார்கள், வட மாகாண சபை உறுப்பினர்கள், வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர், உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.