கல்வி அமைச்சு

பாரம்பரிய கூத்து ஆற்றுகை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது 

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்தும் 2018ம் ஆண்டுக்கான பாரம்பரிய கூத்து ஆற்றுகை பாசையூர் சென் அன்ரனிஸ் திறந்தவெளி அரங்கில் 20 ஒக்ரோபர் 2018 அன்று    இடம்பெற்றது. 

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வு பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் பா.அபிராமி தலைமையில் இடம்பெற்றது. வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரன் அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகவும் வட மாகாண சபை உறுப்பினர்கள், வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர்  சி.சத்தியசீலன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தார்கள். 

இந்நிகழ்வில்  குருநகர் இளைஞர்கலைக்கழகத்தின் “குருசபதம்” தென்மோடி நாட்டக்கூத்து, சுழிபுரம் பெரியபுலோ கலைஞர்களின் வடமோடி நாட்டுக்கூத்து, பாசையூர் புனித அந்தோனியார் கலைக்கழகத்தின் “யாழ்பாடி” தென்மோடி நாட்டக்கூத்து என்பன இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

மதகுருமார், யாழ் மாநகர சபை முதல்வர், பண்பாட்டலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.