ஆளுநர்

 

கௌரவ
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் ஆளுநர் கலந்துரையாடல்

விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் வட மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே கலந்துரையாடினார். இக்கலந்துரையாடல் 26 ஒக்ரோபர் 2018 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சினதும் அதன் கீழ் வரும் திணைக்களங்களினதும் செயலாளர், உதவிச் செயலாளர், திணைக்களத் தலைவர்கள், கணக்காளர்கள், மற்றும் உயர் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டார்கள். 

வடமாகாணத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடி என்பன பிரதானமானது ஆகும். விவசாயத்தினை ஊக்குவிப்பதற்கும் விவசாயிகள் தமது உற்பத்திப்பொருட்களை நஷ்டம் ஏற்படாது விற்பனை செய்வதற்கு இற்றைவரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்த ஆளுநர் விவசாயிகள் நலன்சார்ந்த விடயங்களுக்கு அமைச்சின் அதிகாரிகள் முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விவசாய உற்பத்திப் பொருட்கள் நாளாந்தம் விற்பனை செய்யப்படும் விலை தொடர்பில் அறிந்து கொள்வதற்காக தகவல் அறியும் மையம் ஒன்றினை அமைக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இதன் மூலம் வடமாகாண விவசாயிகள் நாட்டின் முக்கியமான சந்தைகளில் தமது உற்பத்திப் பொருட்களின் விலையினை அன்றாடம் தெரிந்து கொண்டு தமது உற்பத்திப் பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார்.  

விவசாய அமைச்சில் காணப்படும் பணி வெற்றிடங்களை உரிய முறையில் விரைவாக நிரப்புதல் வேண்டும் எனவும் விவசாய அபிவிருத்திக்கான எதிர்காலத் திட்டங்களை தயார் படுத்தி தம்மிடம் சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர் அ.பத்திநாதன்,  ஆளுநரின் செயலாளரர் இ.இளங்கோவன் பிரதிப் பிரதம செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb