கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

வடமராட்சி கல்வி வலய வர்ண இரவு நிகழ்வில் ஆளுநர் கலந்து கொண்டார்

வடமராட்சி கல்வி வலயத்தின் வர்ண இரவு நிகழ்வு 31 ஒக்ரோபர் 2018 அன்று நெல்லியடி மத்திய கல்லூரி அரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே கலந்து கொண்டார்.

வடமராட்சி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில்  விளையாட்டு நிகழ்வுகளில் மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் சிறந்த அடைவினை அடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிக் கேடயங்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், எதிர்வீரசிங்கம், ஆழிக்குமரன் ஆனந்தன் தற்போது ஆசிய கூடைப்பந்தாட்டத்தை சுவீகரித்த தர்சினி போன்றவர்கள் வடமாகாணத்திலிருந்தே இந்த நாட்டிற்கு பெருமை சேர்த்து தந்தார்கள். அதேபோன்று பலர் தேசிய மட்டத்தில் பல பதக்கங்களை பெற்றிருக்கின்றார்கள். அவர்களை மேலும் வளப்படுத்த வேண்டும். சர்வதேச அணிகளுடன் விளையாடக்கூடிய வகையில் அவர்களுக்கான பயிற்சிகளை வழங்க வேண்டும். என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், வட மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார், வடமடராட்சி வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.நந்தகுமார், அதிபர்கள் ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை