பிரதம செயலாளர் செயலகம்

வடக்கு மாகாண இணைந்த சேவையின் பதவியணியினருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கல்

வடக்கு மாகாண இணைந்த சேவையின் பதவியணியான அபிவிருத்தி உத்தியோகத்தர், முகாமைத்துவ உதவியாளர், விவசாய அமைச்சின் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் கணக்காய்வு அலுவலர், பதவிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கல் நிகழ்வு 2018.12.07 ஆம் திகதி வடமாகாண பேரவைச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 

இந் நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III இற்கான 31 வெற்றிடங்கள், முகாமைத்துவ உதவியாளர்தரம் III இற்கான 08 வெற்றிடங்கள், விவசாய அமைச்சின் தொழில்நுட்ப உதவியாளர் தரம் III இற்கான 37 வெற்றிடங்கள், கணக்காய்வு அலுவலர் தரம் III இற்கான 02 வெற்றிடங்கள், ஆகியவற்றிற்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரிகளிற்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்கள் கலந்து சிறப்பித்தார்.