ஆளுநர்

 

கௌரவ
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

தீவுகளுக்களுக்கான பயணிகள் படகுசேவை தொடர்பாக ஆளுநர் கலந்துரையாடல்

தீவுகளுக்களுக்கான பயணிகள் படகுசேவைகளில் ஈடுபடும் படகுகளின் தரம் மற்றும் கடல்போக்குவரத்துக்கான தகுதி சான்றிதழ்களை வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆளுநர் பணித்துள்ளார்.

எழுவைதீவு அனலை தீவு உள்ளிட்ட தீவுகளுக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபட்டுவந்த எழுதாரகை படகின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை சம்பந்தமாக ஆராய்யும் விசேட கூட்டம் வட மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் 13 டிசெம்பர் 2018 அன்று நடைபெற்றது. 

இங்கு கருத்து தெரிவித்த வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ம.பற்றிக்டிறஞ்சன், குறித்த எழுதாரகை படகினை பராமரிப்பு செய்வதற்கு போதுமான வருமானம் கிடைக்கவில்லை அதற்காக பல இலட்சம் ரூபாவினை வருமானத்திற்கு மீறி செலவு செய்கின்றோம். அதனால் அதன் சேவையினை தொடர்ந்து மேற்கொள்வதற்கு இயலாமை ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்று வழி ஒன்றினை ஏற்படுத்தவேண்டும் என ஆளுநரிடம் தெரிவித்தார். 

நெடுந்தாரகை வடதாரகை சேவையில் ஈடுபடுத்துவதைப்போன்று எழுதாரகையினையும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக சேவையில் ஈடுபடுத்த முடியும் அல்லது ஊர்காவற்றுறை பிரதேசபையிடம் கையளித்து மாகாணசபையின் வருடாந்த வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் நிதியினை ஒதுக்கீடு செய்து சேவையில் ஈடுபடுத்த முடியும் அதுவும் கைகூடாது போனால் தனியார் நிறுவனங்கள் ஊடாக இச்சேவையினை செய்ய முடியும் என ஆலோசிக்கப்பட்டது.

இவைகள் அனைத்தினையும் செவி மடுத்த ஆளுநர் தீவகத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் படகுகளின் எண்ணிக்கை கட்டணம் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறும் அவற்றில் சட்டரீதியாக காப்புறுதி செலுத்தப்பட்டு அனுமதியுடன் சேவையில் ஈடுபடும் படகுகளின் விபரங்களையும் கட்டணங்களையும் விபரமாக தெரிவிக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb