வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஆளுநர் பார்வையிட்டார்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை 26 டிசெம்பர் 2018 அன்று பார்வையிட்ட வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே மக்களின்  உடனடித் தேவைகளுக்கான நிவாரணப்  பொருட்களையும் வழங்கி வைத்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் ,பேராறு ,மன்னங்கனட்டி, சுதந்திரபுரம் ,மாணிக்கபுரம் பகுதிகளில் அமைந்துள்ள முகாங்களுக்கும் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை, தர்மபுரம், முரசுமோட்டை ,பரந்தன் ,ஆனந்தபுரம், முறிகண்டி, பகுதிகளில் அமைந்துள்ள முகாங்களையும் ஆளுநர் அதிகாரிகள் சகிதம் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கினார். 

ஆளுநர் முகாங்களை  பார்வையிட சென்றபோது அங்கு அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். 

மக்கள் முன்னிலையில் தமிழில் உரையாற்றிய ஆளுநர் தான் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் வந்திருப்பதாகவும் மீளக்குடியமர வேண்டிய சகல ஏற்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்து வருவதாவும் தெரிவித்தார். மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவையாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் மீளக்குடியமர்ந்த பிறகும் 2 வாரங்களுக்கு உலர்உணவு வழங்க உத்தவிட்டுள்ளதாவும் ஆளுநர் தெரிவித்தார்.