சிறுவர் காப்பகத்திற்கு புதிய சிற்றூர்தி ஒன்றினை ஆளுநர் வழங்கி வைத்தார்

சிறுவர் காப்பகத்திலிருந்து நீதிமன்றம் மற்றும் மருத்துவமனைகளுக்கு சிறுவர்களை அழைத்துச்செல்வதற்காக வடமாகாண சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்திற்கு புதிய சிற்றூர்தி ஒன்றினை வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே 26 டிசெம்பர் 2018 அன்று வழங்கி வைத்தார். 

94 இலட்சம் ரூபாய் பெறுமதியான இந்த சிற்றூர்ந்தினை புத்தசாசன மற்றும் மத நல்லிணக்க அலுவல்கள் அமைச்சு  வட மாகாணத்திற்கு வழங்கியிருந்தது. அதனை உத்தியோகபூர்வமாக சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்கள ஆணையாளர் ரி.விஸ்வரூபனிடம் ஆளுர் கையளித்தார்.