யாழ் நகரை பசுமையாக்கும் வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்ட மரநடுகை

யாழ் நகரை பசுமையாக்கும் வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்ட மரநடுகை வடமாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே தலைமையில் 27 டிசெம்பர் 2018 அன்று நடைபெற்றது.

 வடமாகாண ஆளுநர் அவர்களின் ஒழுங்கமைப்பில் யாழ்மாநகரசபை , யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தலைமையகம் , விவசாய திணைக்களம் , யாழ் மாவட்ட செயலகம்  , மரக் கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து சுமார்  500 மரங்களை இன்று நாட்டி வைத்தனர் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் யாழ் நகரை பசுமையாக்கி மக்களை இயற்கையுடன் ஒன்றிணைப்பேன்  என வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் வடமாகாண அவைத் தலைவர் சிவிகே சிவஞானம் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, யாழ் மாநகர உதவி மேயர் ஈசன் ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.