மன்னாரில் இடம்பெற்ற ஒளிவிழா நிகழ்வில் ஆளுநர் கலந்து கொண்டார்

வடமாகாண கல்வி அமைச்சின் கலாச்சார திணைக்களம் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஒளிவிழா மன்னார் மாந்தை மேற்கு  நகர விளையாட்டு மைதானத்தில் 27 டிசெம்பர் 2018 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே கலந்து சிறப்பித்தார்.

இங்கு உரையாற்றிய ஆளுநர் மதங்கள் முரண்பாடு இல்லாது மனிதர்கள் வாழ வேண்டும் என்று சொல்லுகின்றபோதும் மக்கள் மதங்களில் பெயரால் முரண்பட்டுக் கொள்கின்றார்கள். மதங்கள் மனித நேயத்திதை வலியுறுத்துகின்றன. ஆனால் நம்மில் பலர் அதனை பின்பற்றவில்லை. மத நல்லிணக்கமே  நாட்டிற்கு அபிவிருத்தியை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய இம்மானுவேல் பெர்னான்டோ, குரு முதல்வர்கள், ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் மாந்தை மேற்கு பிரதேச செயலர் செ. கேதீஸ்வரன் கலாச்சார திணைக்கள பதில் பணிப்பாளர் சிவதாஸ் சுஜீவா உட்பட பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.