வவுனியா சிங்கள பிரதேசசபை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநர் கலந்துரையாடல் 

வவுனியா சிங்கள பிரதேசசபை தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் 28 டிடிசம்பர் 2108 அன்று  ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.  

பிரதேசசபைக்கான உழவு இயந்திர சாரதிகள் பற்றாக்குறை, ஜேசிபி ஒன்றினை சபையின் வருமானத்தினை அதிகரிப்பதற்காக கொள்வனவு செய்தல், பிரதேசங்களில் உப அலுவலங்களை அமைத்தலுக்கான நிதியினை பெற்றுக்கொள்ளல் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. 

குறிப்பாக பிரதேசசபைக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் கல்குவாரிகளுக்கான வரிப்பணத்தையும் போக்குவரத்து அனுமதி பத்திரத்திற்கான பணத்தினையும் அதிகரிக்க அனுமதி அளிக்குமாறு  சபையின் தலைவர் சி.பி அலகல்ல வேண்டுகோள் விடுத்தார். 

கோரிக்கைள் தொடர்பாக விரிவான அறிக்கையொன்றினை கையளிக்குமாறு ஆளுநர் சபையின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார். 

இக்கலந்துரையாடலில்  ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ம. பற்றிக்நிறஞ்சன் முதலமைச்சர் அமைச்சின் பதில் செயலாளர் சரஸ்வதி மோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.